வணக்கம், நான் வேதப்ரியா. நான் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவள்.
சில வருடங்களுக்கு முன்பு, எனது தனிப்பட்ட தகவல்கள் இணையவழி தரவு மீறல் காரணமாக கசிந்துவிட்டன. அதே நேரத்தில், நான் செய்யாத பண மீளப்பெறுதல்கள் என் வங்கி கணக்கிலிருந்து இடம் பெற்றுள்ளதை அவதானித்தேன். உடனே வங்கியுடன் தொடர்பு கொண்டு இதைப்பற்றி தெரிவித்தேன். அவர்கள் மேலும் பணம் எடுப்பதை தடுப்பதற்காக எனது வங்கிக் கணக்கை முடக்கி விட்டார்கள்.
துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் இருந்த என் குடும்பத்தாருக்கு அவசர மருத்துவச் செலவுக்காக அனுப்பியிருந்த பணப் பரிமாற்றமும் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு அந்தப் பணம் உடனடியாக தேவை என்பதை அறிந்த நான் மிகவும் ஏமாற்றமும் கவலையும் அடைந்தேன்.
அதற்குப் பிறகு நான் சில நாட்கள் மன உளைச்சலில் இருந்தேன். அந்த தரவு மீறலில் கசிந்த என் மற்ற தகவல்களையும் யாராவது தவறாக பயன்படுத்துவார்களோ என்று அடிக்கடி யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்போதிலிருந்தே நான் இணையத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினேன். என் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி உரையாடவும் தொடங்கினேன்.
இப்போது எனது இணையத்தள கணக்குகளுக்கெல்லாம் குறைந்தபட்சம் 15 எழுத்துகளைக் கொண்ட தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதில் உறுதியுடன் செயல்படுகிறேன். மேலும் கூடுதல் பாதுகாப்புக்காக பல காரணிச் சேர்க்கைகளைக் கொண்ட உறுதிப்பாட்டு முறைமைகளை அமைத்துக் கொள்கிறேன், அதாவது multi-factor authentication ஐப் பயன்படுத்துகிறேன். எனவே யாராவது என் கடவுச்சொல்லை பெற்றாலும் கூட, அவர்களால் என் வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
எனது சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, எப்போதும் அறிவிப்பு வந்தவுடனேயே மென்பொருளைப் புதுப்பிப்பேன். அதாவது software updates ஐப் புதுப்பிப்பேன் இதே ஆலோசனையை என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.